மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணி : தடுத்த விமான நிலைய அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி

சென்னை விமான நிலையத்தில் மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணியை அதிகாரி தடுத்து நிறுத்தும்போது அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி.
மது போதையில் விமானத்தில் ஏற முயன்ற பயணி : தடுத்த விமான நிலைய அதிகாரியை தள்ளிவிட்டு தாக்க முயற்சி
x
சென்னை விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக பிரதீப்குமார் ராய் என்பவர் வந்துள்ளார். அப்போது அவர் மது அருந்தி வந்ததால் அவரை விமானத்தில் ஏற  விமான அதிகாரி அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த பிரதீப்குமார் ராய் விமான அதிகாரியை தள்ளிவிட்டு தாக்குவதற்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமான நிலைய அதிகாரி அளித்த புகாரின் பேரில் பிரதீப் குமார் ராயிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை எச்சரித்து வேறு விமானத்தில் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்