"காவல் ஆய்வாளர் பணி இடமாற்றம்" : மீனவ மக்கள் சாலை மறியல்

காவல் ஆய்வாளரை பணி இடமாற்றம் செய்ய கூடாது என்று மீனவ மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் ஆய்வாளர் பணி இடமாற்றம் : மீனவ மக்கள் சாலை மறியல்
x
சென்னை காசிமேடு காவல்  ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன், அம்பத்தூர் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டார். இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காசிமேடு சிங்காரவேலர் மீனவர் குடியிருப்பு மக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர். சிதம்பரம் முருகேசன், காசிமேடு ஆய்வாளராக வந்த பிறகே பிரச்சனைகள் குறைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்