மாமல்லபுரத்தை அழகுபடுத்த எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன?

மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து, புகைப்பட ஆதாரத்தோடு அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தை அழகுபடுத்த எடுக்க உள்ள நடவடிக்கைகள் என்ன?
x
மாமல்லபுரத்தை நிரந்தரமாக  பாதுகாக்கக்கோரி கடந்த 1-ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வினீத் கோத்தாரிக்கு, நீதிபதி கிருபாகரன்  கடிதம் அனுப்பி இருந்தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தாமாக முன் வந்து வழக்காக எடுத்துகொண்ட நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, தமிழகத்தின் பெருமையாக கருதப்படும் மாமல்லபுரத்தை அழகுபடுத்தி பாதுகாக்க வேண்டியது அவசியம் என தெரிவித்தனர். மாமல்லபுரத்தை நிரந்திரமாக பாதுகாக்க எடுக்க உள்ள நடவடிக்கைகள், ஒதுக்கப்பட உள்ள நிதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், புகைப்பட ஆதாரத்துடன் அறிக்கையாக, 4 வாரங்களில் தாக்கல் செய்ய, மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 11-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்