ஹீரோவாக மாற போகும் மக்களின் நண்பன் - 'சின்னத்தம்பி' யானை

கடந்த 9 மாதங்களுக்கு முன் வனத்துறையிருக்கு ஆட்டம் காட்டி, மக்களையும் துன்புறுத்தாமல், அவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த யானை சின்னத்தம்பி மீண்டும் கலக்க தயாராகிவிட்டது... யானை சின்னத்தம்பி குறித்த புதிய அப்டேட்டை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்
x
20 வயது காட்டுயானை ஒன்று அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் நுழைந்து, மக்கள் அன்பாக கொடுக்கும் உணவு பொருட்களையும், சில  சமயங்களில், அங்குள்ள தோட்டங்களையும் துவம்சம் செய்வதை வழக்கமாக வைத்திருந்த‌து. 
மக்களிடம் அன்பாக பழகி வந்த‌ இந்த யானைக்கு அப்பகுதி மக்கள் வைத்த பெயர் சின்னத்தம்பி. அந்த யானையால் தூக்கம் தொலைத்த‌தாக பொதுமக்களில் சிலர் வனத்துறையிடம் புகார் அளிக்க, வரகளியாற்றுக்கு கொண்டு செல்லப்பட்டது, சின்னத்தம்பி.ஆனால் ஒரே வார‌த்தில், மீண்டும் தன் வாழ்விடத்தை தேடி, காட்டை விட்டவெளியேறிய சின்னத்தம்பி, கண்ணாடிபுத்தூர் வரை பயணத்தை தொடர்ந்தது. 100 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேல் பயணித்த யானை சின்னத்தம்பியை அத்தனை பேர் சுற்றி நின்று பிடிக்க முயற்சித்தாலும், யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் பணத்தை தொடர்ந்தது சின்னத்தம்பி... இதனால் அந்த நாட்களில் சமூக வலைதளங்களிலும் சின்னத்தம்பியின் புகழ் பரவியது. இவ்வாறு அத்தனை பேருக்கும் செல்லப்பிள்ளையாக  மாறிப்போன சின்னத்தம்பி, பெரும் போராட்டத்துக்கு பின் வனத்துறையினரால் சிறைபிடிக்கப்பட்டது. 
கிட்டத்தட்ட 9 மாதங்கள் கூண்டுக்குள்ளும் வனத்துறையினர் கட்டுப்பாட்டிலும் வாழ்க்கையை கழித்தது சின்னத்தம்பி... தற்போது பின்னங்கால்களை மடக்கி முன்னங்கால்களை தூக்குவது, ஸ்டைலாக நிற்பது, மரங்கள் தூக்குவது என பாகன் கூறும் அனைத்தையும் கனிவாக செய்து வருகிறது யானை சின்னத்தம்பி.அடுத்த 10 நாட்களுக்குள் கோக்கமுதி முகாமிற்கு சின்னத்தம்பியை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ள வனத்துறை, இதனை கும்கி யானையாக மாற்றும் திட்டமிட்டுள்ளது... குறும்புத்தனம் செய்து மக்களை அச்சுறுத்திய யானை சின்னத்தம்பி, விரைவில், கும்கி யானையாக மாறி,  மக்களை காப்பாற்றும் ஹீரோ மாறப்போகின்றது

Next Story

மேலும் செய்திகள்