15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை

நாகை மாவட்டம் சீர்காழி அருகே 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை : ஒருவரை கைது செய்து போலீசார் விசாரணை
x
சித்தன்காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, நாங்கூர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளிக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிவந்தபோது. அங்குள்ள தோப்பு ஒன்றில், பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்து, தலையில் ரத்தக் காயங்களோடு,  உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓட்டுனர் கல்யாண சுந்தரம் என்பவரை  போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்