கடலில் குளிக்க சென்று மாயமான மாணவர் - சடலமாக கரை ஒதுங்கிய பரிதாபம்
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த தினேஷ் குமார் என்ற மாணவர், கல்லூரி நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற போது, அலையில் இழுத்து செல்லப்பட்டார்.
சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த தினேஷ் குமார் என்ற மாணவர், கல்லூரி நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற போது, அலையில் இழுத்து செல்லப்பட்டார். அருகில் இருந்த மீனவர்கள் வந்து காப்பாற்றுவதற்குள் மாணவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து, நள்ளிரவு வரை மாணவரை தேடும் பணி நீடித்து வந்தது. இந்த நிலையில், மாணவரின் சடலம் காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியில் கரை ஒதுங்கியது.
Next Story