மணப்பாறை குழந்தை விற்பனை சம்பவம் : எச்.ஐ.வி இருந்த‌தால் குழந்தையை விற்றதாக தாய் தகவல்

குழந்தையை பணத்திற்கு விற்ற பெற்றோரும், வாங்கிய தம்பதியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மணப்பாறை குழந்தை விற்பனை சம்பவம் : எச்.ஐ.வி இருந்த‌தால் குழந்தையை விற்றதாக தாய் தகவல்
x
குழந்தையை பணத்திற்கு விற்ற பெற்றோரும், வாங்கிய தம்பதியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு, மூன்றாவதாக வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, மேரி என்ற பெண் அந்த தம்பதியிடம் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, அந்த தம்பதியினரை மணப்பாறை அழைத்து சென்ற மேரி,  வேறொரு தம்பதிக்கு குழந்தையை விற்றுள்ளார். அந்த குழந்தைக்கு திடீரென கடுமையாக காய்ச்சல் ஏற்படவே, மருத்துவனைக்கு அழைத்து சென்றபோது, இந்த குழந்தை விற்பனை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இதையடுத்து, இரு தம்பதிகள், இடைத்த‌ரகாக செயல்பட்ட பெண் என 5 பேரை கைது செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தமக்கு எச்.ஐ.வி. தொற்று இருந்ததால் குழந்தையை விற்றதாக, தாய் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்