மண்ணில் புதைந்து இருக்கும் விஷ்ணு கோவில்கள்? - சிலைகள் திருடு போனதாக சிவகங்கை பொதுமக்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பாசேத்தி கிராமத்தில் 20 சாமி சிலைகள் காணாமல் போயிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மண்ணில் புதைந்து இருக்கும் விஷ்ணு கோவில்கள்? - சிலைகள் திருடு போனதாக சிவகங்கை பொதுமக்கள் குற்றச்சாட்டு
x
சிவகங்கை மாவட்டம் , திருப்பாசேத்தி கிராமத்தில் 20 சாமி சிலைகள் காணாமல் போயிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். திருப்பாசேத்தி கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன் விஷ்ணுகோவில்கள் இருந்ததாகவும் , மண்ணில் புதைந்திருந்த விஷ்ணு உட்பட 20 பாரிவார தெய்வங்களின் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் எடுத்து சென்றதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். சிலைகள் இருந்த இடத்தை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் , கீழடி நாகரீகம் போன்று , திருப்பாசேத்தி கிராமத்தில் பழமையான பொருட்கள் கிடைக்கும் என கூறும் பொதுமக்கள் , சிலைகளை கண்டிபிடிக்க கோரியும் அங்கு அகழாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்..

Next Story

மேலும் செய்திகள்