பெங்களூரில் இருந்து லாரியில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் புகையிலை பறிமுதல்

ஓமலூர் அருகே பெங்களூருவில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கடத்திவரப்பட்ட 25 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பிடிபட்டது.
பெங்களூரில் இருந்து லாரியில் கடத்தி வந்த ரூ.25 லட்சம் புகையிலை பறிமுதல்
x
புகையிலை பொருட்கள் கடத்தல் தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில்,  ஓமலூர் கமலாபுரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக காய்கறி ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனையிட்டதில், காய்கறி முட்டைகளுக்கு அடியில் ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்களை மறைத்து கடத்திவந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 19 முட்டைகளில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேச்சேரியை சேர்ந்த ஓட்டுநர்கள் சண்முகம்,  மணிகண்டன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில், பெங்களூரில் இருந்து புகையிலையை கடத்தி வந்து திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. 


Next Story

மேலும் செய்திகள்