விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
விஜயகாந்த் தலைமையில் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கோயம்பேடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சுதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், குழந்தை சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தும், தமிழக உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்தும், 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களை வழங்குமாறு தேமுதிக தரப்பில் கோரப்பட்டு உள்ளதாகவும், இதனை வழங்க அதிமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். தேமுதிகவின் பலம் குறித்து முதலமைச்சருக்கு நன்றாக தெரியும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்