சாலைகளை ஆக்கிரமித்த வழிபாட்டு தலங்கள் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

அரசு நிலங்கள், சாலைகளை ஆக்கிரமித்து கட்டபட்டுள்ள வழிபாட்டுதலங்களை அகற்ற தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சாலைகளை ஆக்கிரமித்த வழிபாட்டு தலங்கள் : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
x
தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷசாயி அமர்வு, முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிப்பாட்டு தலங்களை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக டிசம்பர் 6ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் வக்பு வாரியம் மற்றும் பேராலயங்களின் அமைப்புகளை பிரதிவாதிகளாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 6 தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்