சிவகங்கை: கரடு முரடான சாலையால் மக்கள் பாதிப்பு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் - மரகதபுரம் சாலை பணிகள் நிறைவு பெறாத நிலையில், கரடு முரடான இந்த சாலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை: கரடு முரடான சாலையால் மக்கள் பாதிப்பு
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே காளாப்பூர் - மரகதபுரம் சாலை பணிகள் நிறைவு பெறாத நிலையில், கரடு முரடான இந்த சாலையில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரு கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கரடு முரடாக காட்சியளிக்கு இந்த சாலையை, அன்றாட பயணங்களுக்கு பயன்படுத்த முடியவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே விரைவில் பணிகளை முடித்து சாலையை பயன்பாட்டிற்கு விடவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.   Next Story

மேலும் செய்திகள்