முன்கூட்டியே வெளியான வினாத்தாள் : பிற்பகலில் நடந்த வேதியியல் பருவத்தேர்வு

சென்னை அண்ணா பல்கலை கழகத்தின் பருவத்தேர்வில், வேதியியல் வினாத்தாள் முன்கூட்டியே வெளியான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்கூட்டியே வெளியான வினாத்தாள் : பிற்பகலில் நடந்த வேதியியல் பருவத்தேர்வு
x
அண்ணா பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லூரிகளில் பருவத்தேர்வு நேற்று தொடங்கியது. ஆனால், வேதியியல் தேர்வுக்கான வினாத்தாள் முன் கூட்டியே, வெளியானதாக புகார் எழுந்தது. உடனடியாக அண்ணா பல்கலைக் கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம், அனைத்து கல்லூரிகளுக்கும் அவசர தகவல் அனுப்பி, பழைய வினாத்தாளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. புதிய வினாத்தாள் ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டு பிற்பகலில் வேதியியல் தேர்வு நடந்தது. பருவத்தேர்வின் துவக்கத்திலேயே வினாத்தாள் லீக் ஆகியிருப்பது, அண்ணா பல்கலையின் மாணவர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. வினாத்தாள் முன்கூட்டியே வெளியான புகார் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்