இந்து கடவுள்களின் படங்களை எரித்த பாதிரியார் கைது

ஒசூர் அருகே இந்து கடவுள்களின் உருவ படங்களை தீயிட்டு எரித்த கிறிஸ்தவ பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.
இந்து கடவுள்களின் படங்களை எரித்த பாதிரியார் கைது
x
ஒசூர் அருகே இந்து கடவுள்களின் உருவ படங்களை தீயிட்டு எரித்த கிறிஸ்தவ பாதிரியாரை போலீசார் கைது செய்தனர். ஒசூரை அருகே, எஸ்.குருபட்டி கிராமத்தில் உள்ள தேவாலயத்தில் மதுரை ஜீவா நகரை சேர்ந்த ஜான் பிரிட்டோ  என்பவர்  மதபோதகராக பணியாற்றி வருகிறார். அவர், தேவாலய கழிவறையில் இந்து கடவுள்களின் உருவ படங்களை தீயிட்டு எரித்ததாக அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.  இது தொடர்பாக இந்து முன்னணி சார்பில் தேன்கனி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார்  மேற்கொண்ட விசாரணையின் போது ஜான் பிரிட்டோ தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜான்பிரிட்டோவை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்