"தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு": சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
x
அந்தமான் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை புயலாக வலுப்பெறக் கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. ​இது  வடமேற்கு திசையில் மேற்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர கூடும் எனவும்,  இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, மீனவர்கள் இன்று மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும், நாளை மத்திய மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்