"அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகள் மூடப்படும்" - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

அங்கீகாரமின்றி செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை செய்துள்ளது.
அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகள் மூடப்படும் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
x
அங்கீகாரமின்றி  செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை செய்துள்ளது. தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெற வேண்டிய நிலையில், இந்த ஆண்டு அங்கீகாரம் பெறாத பள்ளிகளின் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில், சென்னை மேற்கு மாவட்ட கல்வி அலுவலர் சார்பில், அந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பள்ளிக்கல்வித் துறையின் அனுமதி பெறாமல் இயங்கினால், தினசரி 10 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும் என்றும், அங்கீகாரம் பெறுவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். அறிக்கை அளிக்க தவறும் பள்ளிகள் நிரந்தரமாக மூடப்படும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்