ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா : மங்கள இசையுடன் தொடங்கியது...

தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 34வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது.
ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா : மங்கள இசையுடன் தொடங்கியது...
x
தஞ்சையை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் ஆயிரத்து 34வது சதய விழா மங்கள இசையுடன் தொடங்கியது. ராஜராஜ சோழன் பிறந்த தினமும், முடிசூட்டிய தினமுமான ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினம், ஆண்டுதோறும் ராஜராஜன் சதய விழாவாக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கவியரங்கம், பட்டிமன்றம், இசை அரங்கம், நாட்டிய அரங்கம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. முக்கிய நிகழ்வான ராஜராஜ சோழனுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்தல், யானை மீது திருமுறை வீதி உலா உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு தஞ்சையில் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்