"நடிகர் விஜய்யின் பஞ்ச் வசனங்களை கேட்டு குணமடையும் அபூர்வம்"

பிறப்பிலேயே நடக்க, வாய் பேச முடியாத சிறுவன்
x
கேரள மாநிலம் இடுக்கியில் -  நடக்க , வாய் பேச முடியாத சிறுவன் ஒருவனுக்கு மருத்துவர்கள் நடிகர் விஜய்யின் வசனங்களை கூறி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சிறுவன் செபாஸ்டியனுக்கு பல மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காததால் , அவனை பெற்றோர், இடுக்கியில் உள்ள பஞ்சகர்மா சிகிச்சை நிலையத்தில் அனுமதித்தனர். அப்போது மருத்துவமனையில் "செல்ஃபி புள்ள" ரிங்டோனை கேட்ட சிறுவனிடம் அசைவுகள் ஏற்படுவதை மருத்துவர்கள் கண்டனர். அதனை தொடர்ந்து விஜய் படங்கள் ஒளிபரப்பும் பொழுது, சிறுவனிடம்  மாற்றத்தை கண்டுள்ளனர். இந்நிலையில், விஜய்யின் பஞ்ச் வசனங்கள் மற்றும் நடன காட்சிகளை காட்டியதால் சிறுவன் மெதுவாக நடப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். நடிகர் விஜய் படங்கள் மூலம் சிறுவன் செபாஸ்டியன் குணமடைய துவங்கியது அவனது பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்