மாஞ்சா நூல் அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு : தந்தையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது சோகம்
சென்னை கொருக்குபேட்டையில், காற்றாடி மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையில் மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் கோபால், என்பவர் தமது மகன் அபினேஷ்வரன் திடீரென காற்றாடி மாஞ்சா நூல் அறுந்து வந்துள்ளது. இது குழந்தையின் கழுத்தை அறுத்தது. இதனால் சிறுவன் அபினேஷ்வரன் துடித்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு, கொண்டு செல்லப்பட்டான். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபினேஷ்வரன் உயிரிழந்தான். மாஞ்சா நூல் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் காற்றாடி விடுவது தலைதூக்கியுள்ளது. மாஞ்சா நூலால், குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

