"மீட்பு நடவடிக்கை எடுத்த கனிமொழிக்கு நன்றி"- மீனவர்கள்

நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்களை மீட்ட மத்திய அரசுக்கு நன்றி என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்
மீட்பு நடவடிக்கை எடுத்த கனிமொழிக்கு நன்றி- மீனவர்கள்
x
நடுக்கடலில் தத்தளித்த தூத்துக்குடி மீனவர்களை மீட்ட மத்திய அரசுக்கு நன்றி என எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தருவைகுளம் பகுதியில் இருந்து 5 விசைப் படகுகளில் கடலுக்கு சென்ற 40 மீனவர்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டு நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதுகுறித்து அவர்களது உறவினர்கள் தூத்துக்குடி எம்.பி. கனிமொழியிடம் கூறியுள்ளனர். அவர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பேசியதைத் தொடர்ந்து  40 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்காக  கனிமொழி எம்.பி.யை சந்தித்த மீனவர்களின் உறவினர்கள்  மீட்பு நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி  நீர்வழித் தடங்களை தூர்வாரும் பலகை மட்டுமே உள்ளதாகவும் தூர்வாராததால் மழை நீர் வீணாவதாகவும் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்