கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை : ஊழியர்கள் 5 பேரிடம் விடிய விடிய விசாரணை

திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ஒரு கோடியே 43 லட்சம் திருடு போனது குறித்து, பெண் ஊழியர் உள்பட 5 பேரிடம் விடிய விடிய விசாரணை தொடர்கிறது.
கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி கொள்ளை : ஊழியர்கள் 5 பேரிடம் விடிய விடிய விசாரணை
x
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் ஒரு கோடியே 43 லட்சம் திருடு போனது குறித்து, பெண் ஊழியர் உள்பட 5 பேரிடம் விடிய விடிய விசாரணை தொடர்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, லலிதா ஜுவல்லரியை தொடர்ந்து, திருச்சியில் நடந்த இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 1 கோடியே 43 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து, திருவெறும்பூர் பெல் தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தலைவர் மனுநீதிச்சோழன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து பெல் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.  பலத்த பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருப்பதால், பெல் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களே இதில் ஈடுபட்டிருக்க வேண்டும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக, கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் உட்பட, 5 பேரை ரகசிய இடத்தில் வைத்தில், காவல்துறையினர் விடிய விடிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்