ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
x
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் அதன்  தலைவர் ஆர்.கே. செல்வமணி உள்ளிட்டோர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன் வைத்தனர். வனவிலங்குகளை திரைப்படங்களில்  காட்டுவதற்கான தடையில்லா சான்றிதழை சென்னையில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், திரைப்படங்களுக்கான இணையவழி டிக்கெட் விற்பனையை இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி.யால்  திரைப்படத்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின்  பொன்விழாவில்   பங்கேற்க , நிர்மலா சீதாராமனுக்கு தென்னிந்திய திரைப்பட  தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள், அழைப்பு விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்