ஓரின சேர்க்கைக்கு இணங்காதவர் கொல்லப்பட்ட சம்பவம் : 7 பேருக்கு ஆயுள் தண்டனை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஓரின சேர்க்கைக்கு இணங்காதவர் கொல்லப்பட்ட சம்பவம் : 7 பேருக்கு ஆயுள் தண்டனை
x
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2008 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் புதிய பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த பகவதி என்பவர் ஓரினச்சேர்க்கைக்கு உடன்படாத‌தால், அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக களக்காட்டை சேர்ந்த பகவதியின் சகோதரி அளித்த புகாரின் பேரில் வள்ளியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய முத்து, பாண்டியன், முத்துகிருஷ்ணன், ஐயப்பன் கணேசன், சிவா மற்றும் சுல்தான் ஆகிய  7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று இறுதிகட்ட விசாரணையை நடத்திய நீதிபதி விஜயகாந்த் தலைமையிலான அமர்வு,  7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்