மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு

கேரளாவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகம் மாவோயிஸ்டாக மாறியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் - உடலை அடக்கம் செய்ய கிராமத்தினர் எதிர்ப்பு
x
கேரளாவில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகம் மாவோயிஸ்டாக மாறியது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி ராமமூர்த்திநகர் மலை கிராமத்தை சேந்தவர் மணிவாசகம். பட்டப்படிப்பு படித்த மணிவாசகம் மக்கள் யுத்த குழுவில் சேர்ந்து பின்னர் மாவோயிஸ்ட் குழுவில் இணைந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காட்டுப்பகுதியில் 2002-ம் ஆண்டு மாவோயிஸ்ட் குழுக்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது போலீசார் சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், சிவா என்ற பார்த்திபன் சுட்டு கொல்லப்பட்டார்.இதில் கைதானவர்களில் மணிவாசகமும் ஒருவர் ஆவார்.  எந்த வகையிலான துப்பாக்கிகளையும் சரளமாக கையாளக்கூடியவர் மணிவாசகம். இவரது உடலை அடக்கம் செய்ய காடையாம்பட்டி மக்கள் எதிர்ப்பு  தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்