நாளை முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்

முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
நாளை முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா : பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார்
x
முத்து ராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையையொட்டி, பசும்பொன் கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில், உள்ள முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், நாளை 112-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. அதோடு, நாளை மறுநாள் அவரது 57-வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 80 கேமரா பொருத்தப்பட்டும், 18 சோதனை சாவடி அமைக்கப்பட்டும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை தவிர, ஆளில்லா உளவு விமானம் மூலமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்