சுஜித் நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி

சிறுவன் சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்
x
சிறுவன் சுஜித்தின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மணப்பாறை அடுத்த பாத்திமா புதூர் கல்லறைத் தோட்டத்திற்கு சென்ற அவர், அங்கு சுஜித்தின் நினைவிடத்தில், மலர் மாலை அணிவித்தார். இந்த நிகழ்வின் போது, எம்.பிக்கள் திருநாவுக்கரசர், திருச்சி சிவா, ஜோதிமணி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  இதனை தொடர்ந்து நடுக்காட்டுப்பட்டிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், சிறுவன் சுஜித்தின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், சிறுவனை மீட்கும் பணியில் அரசு மெத்தனமாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்