தீபாவளியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி - காளை முட்டியதில் ஒருவர் பலி, 50 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் களைகட்டிய மஞ்சுவிரட்டு போட்டியில், பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று ரசித்தனர்.
தீபாவளியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு போட்டி - காளை முட்டியதில் ஒருவர் பலி, 50 பேர் காயம்
x
புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் களைகட்டிய மஞ்சுவிரட்டு போட்டியில், பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று ரசித்தனர். தீபாவளியை முன்னிட்டு நடந்த இந்த நிகழ்ச்சியில், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்டன. பொட்டல் காட்டில், ஆங்காங்கே அவிழ்க்கப்பட்ட காளைகள், வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. காளைகள் முட்டியதில், புதுக்கோட்டையைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் பலியானார். 50 பேர் காயமடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்