'பிகில்' படம் வெளியாவதில் தாமதம் : பேனர்கள் உடைப்பு, கல்வீசி தாக்குதல்

மதுரையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 27 திரைகளில் வெளியிடப்பட்டது.
x
மதுரையில் விஜய்யின் பிகில் திரைப்படம் 27 திரைகளில் வெளியிடப்பட்டது. விஜய் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.  பட்டாசு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என பலத்த சோதனைக்கு பின்னரே ரசிகர்கள்,பொதுமக்கள் திரையரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படத்தை திரையிட  தாமதமானதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ரவுண்டானா அருகே இருந்த கடைகளின் பேனர்கள் உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால், அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

கேரளாவில் வெளியானது, 'பிகில்' திரைப்படம் : ரசிகர்கள் ஒன்றுக்கூடி ஆரவாரம்

கேரளாவிலும் ரசிகர்களின் ஆரவாரத்திற்கு இடையே பிகில் திரைப்படம் வெளியானது. மேளதாளம் அடித்து, பேனர், போஸ்டர்கள் வைத்து ரசிகர்கள் கோலகலமாக கொண்டாடினர்.

Next Story

மேலும் செய்திகள்