அதிக ஒலி எழுப்ப கூடிய வெடிகளை தவிருங்கள் : தமிழக மக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை

அதிக ஒலி எழுப்ப கூடிய பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்குமாறு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிக ஒலி எழுப்ப கூடிய வெடிகளை தவிருங்கள் : தமிழக மக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுரை
x
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அறிவிப்புடன், திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது . அதிக ஒலி எழுப்ப கூடிய மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், வழிபாட்டு ஸ்தலங்கள், குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு  அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்