சின்னத்திரை நடிகை ராகவி கணவர் உயிரிழப்பு : கொலையா? - தற்கொலையா? - போலீசார் விசாரணை

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில், பிரபல சின்ன திரை சீரியல் நடிகை ராகவியின் கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
சின்னத்திரை நடிகை ராகவி கணவர் உயிரிழப்பு : கொலையா? - தற்கொலையா? - போலீசார் விசாரணை
x
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் ஆண் ஒருவர் தூக்கில தொங்கி நிலையில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே காவல் ஆய்வாளர் பழனி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் சின்னத்திரை நடிகை ராகவியின் கணவர் சசிகுமார் என்பது தெரிய வந்தது. ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த சசிகுமார், மகேஷ் என்பருடன் தொழிலில் தகராறு மற்றும் கடன் சுமை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சசிகுமார் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்