கீழடி பொருட்களை கொண்டு தற்காலிக அருங்காட்சியகம் - மதுரையில் அக்.30ல் அருங்காட்சியகம் திறப்பு
கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களின் தற்காலிக அருங்காட்சியகம் மதுரையில் அமைக்கப்பட உள்ளது.
கீழடியில் 5 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்குமாறு வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு கிடைத்த பொருட்களில் முக்கியமாக கருதப்படும் சுமார் 750 பொருட்கள் மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை கண்காட்சியாக வைக்க ஏற்பாடு நடைபெறுகிறது. மதுரையில் சட்டக்கல்லூரி அருகே உள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தின் முதல் தளத்தில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அக்டோபர் 30ம் தேதியன்று தேவர் ஜெயந்தி விழா மற்றும் மதுரையில் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வர இருப்பதால், அந்த நாளில், கீழடி தற்காலிக அருங்காட்சியகத்தை அவர்கள் திறந்து வைப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story

