குன்னூரில் கனமழை - மண்சரிவு

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில், நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குன்னூரில் கனமழை - மண்சரிவு
x
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில், நான்கிற்கும்  மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூரில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் கெந்தளா அருகே பாறை சரிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல், வெலிங்டன் ராணுவ பகுதிக்கு செல்லும் சாலையில் ஆரஞ்சு குரோவ்  அருகே  மூன்று இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால் சாலை துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு, மாநில நெடுஞ்சாலை துறையினர், மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குந்தா பாலம் குடியிருப்பு பகுதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்