சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை மும்முரம்

சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.
x
சென்னையில்  தீபாவளியையொட்டி  ஆண்டு தோறும் தீவுத்திடலில்  பட்டாசுகள்  கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 70க்கும் மேற்பட்ட பட்டாசு  கடைகள் அமைக்கப்பட்டு ஏராளமான பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.   பலவிதமான புதுவித பட்டாசுகள் இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஏராளமானோர் ஆர்வமுடன் பட்டாசுகளை  வாங்கி செல்கின்றனர். வெளியிடங்களை விட இங்கு குறைந்த விலையில் பட்டாசு கிடைப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்