100 அடியை எட்டியது பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமான பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக 2 வது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டி.எம்.சி. கொள்ளளவும் கொண்டது. வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நீர் மட்டம் 102 அடியை தொட்டவுடன் உபரிநீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

