இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
இடைத்தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தேர்தல் பார்வையாளர்கள் இன்று முதல் பணிக்கு அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் 1 கோடியே 2 லட்சம் மதிப்பிலான பணம், நகை மதுபானம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது என்றார்.

நாங்குநேரியில் 2 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ,. சரவணனுக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படும் நிலையில், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் பெறப்பட்ட அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளோம் எனவும் அவர் கூறினார்.

மேலும், ராஜீவ் காந்தி தொடர்பாக சீமானின் பேச்சு குறித்த அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்க்கு அனுப்பவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்