உடல் பருமன் அறுவை சிகிச்சை குறித்த மாநாடு-பல்வேறு நாடுகளை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்பு

உடல் பருமன் அறுவை சிகிச்சை குறித்த "லேப்ரோபிட்" 9வது சர்வதேச மாநாடு, ஜெம் மருத்துவமனை சார்பில் சென்னையில் நடைபெறுகிறது.
உடல் பருமன் அறுவை சிகிச்சை குறித்த மாநாடு-பல்வேறு நாடுகளை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்பு
x
உடல் பருமன் அறுவை சிகிச்சை குறித்த "லேப்ரோபிட்" 9வது  சர்வதேச மாநாடு ஜெம் மருத்துவமனை சார்பில் சென்னையில் நடைபெறுகிறது.  அண்ணா சாலையில் உள்ள தனியார் விடுதியில் 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டினை தேசிய தேர்வுகள் வாரிய தலைவர் டாக்டர் அபிஜித் செத் தொடங்கி வைத்தார். சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சார்ந்த 250-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெம் மருத்துவமனையின் உடல் பருமன் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் மருத்துவர் பிரவீன் கூறும்போது உடல் பருமன் சிகிச்சை மூலம் பல நோய்கள் கட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்