100 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் புகழ் பெற்ற சாத்தூர் சேவு -தீபாவளியையொட்டி தயாரிக்கும் பணி தீவிரம்

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் 100 ஆண்டுகளை கடந்து பாரம்பரியமிக்க சுவையுடன் தீபாவளிக்கு தயாரிக்கப்படும் காரச்சேவு பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்
x
பாரதியார் வீரப்பலகாரங்கள் என ஒரு பட்டியல் போட்டதில் சேவு-வை அதில் இணைத்துள்ளார் . சேவு பல ஊர்களில் தயாரிக்கப்பட்டாலும் அதற்கென புகழ் பெற்ற ஊர் விருதுநகா் மாவட்டம்  சாத்தூர் தான்.நயம் சேவு, நடப்பு சேவு, காரச்சேவு, சீரக சேவு, மிளகு சேவு, பட்டர் சேவு, சர்க்கரை சேவு, குச்சி சேவு, கருப்பட்டி சேவு என பல வகைகள் உள்ளன.  நடப்புச் சேவு சிறு குழந்தைகளுக்கு பிடிக்கும் விதமாகவும், காரச்சேவு  பெரியவர்கள் விரும்பி உண்ணும் வகையிலும் தயாரிக்கபடுகிறது. தீபாவளியை முன்னிட்டு சாத்தூரில் சேவு தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலை தீபாவளி கொண்டாடும் திருமண தம்பதிகளுக்கும் சீர் பலகாரமாக இனிப்புகளுடன், சாத்தூர் காரச் சேவுகளையும் வாங்கி செல்கின்றனர்.சாத்தூர் சேவு ,  உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் உள்ள பெரிய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.நூறு ஆண்டுகளாக சேவு தயாரிப்பில் துளி அளவு கூட ருசி மாறாமல் பாரம்பரிய முறையில் தயாரிக்கிப்படுவதால் சாத்தூர் காரச்சேவுக்கு மவுசு அதிகம் என விரும்பி வாங்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தாண்டு மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக சாத்தூர் காரச்சேவின் விலை 5 சதவீதம் அதிகரித்துள்ளது.




Next Story

மேலும் செய்திகள்