சேலையூர் போலீசாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

சீன அதிபர் வருகையின்போது போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த திபெத்தியர்களை கைது செய்த சேலையூர் போலீசாருக்கு சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
x
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஹின்பிங் சந்திப்புக்கு முன்னதாக, சென்னையில் தங்கியுள்ள திபெத் நாட்டினர் குறித்த விவரங்களை சேகரித்த சேலையூர் காவல்நிலைய போலீசார், கிழக்கு தாம்பரம் பகுதியில் சோதனை செய்தனர். சீன அதிபருக்கு  எதிரான போஸ்டர்களை எழுதிக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் ஒரு மாணவி உள்ளிட்ட 8 பேரை போலீசார் சேலையூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட அடிப்படையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக சீன அதிபருக்கு எதிராக என்னையில் பெரிய அளவில் நடைபெற இருந்த போராட்டம் முறியடிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிறப்பாக செய்த சேலையூர் காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவு போலீசாரை சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார். சேலையூர் காவல் ஆய்வாளர் சீனிவாசன், உதவி ஆய்வாளர்கள் கனகதாசன், ராஜசேகரன், ஜனார்த்தனன் ஆகியோரை நேரில் அழைத்த ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்தார். அதேபோல், சோதனையை திறம்பட செய்த காவலர்கள் ஐசக், பன்னீர்செல்வம், சோலைராஜா, எஸ்.பி.கௌரி, அருணகிரி, வேல்விழி, சரண்யா ஆகியோரையும் நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்,  பரிசு வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்