சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை

பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி சஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சஹி-மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை
x
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலாயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக  மாற்றம் செய்யப் பட்டதை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அஜய்குமார் மிட்டலை மத்திய பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்  பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள ஏ.பி. சஹியை  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்ற கொலிஜீயம் பரிந்துரை செய்துள்ளது .

Next Story

மேலும் செய்திகள்