சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை, அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வெள்ளம்

சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக நள்ளிரவில் மழை வெளுத்து வாங்கியது.
x
சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கிய மழை, நள்ளிரவுக்கு பிறகும் நீடித்தது. நுங்கம்பாக்கம் பகுதியில் 6 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல, எழும்பூர், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, வியாசர்பாடி, ஓட்டேரி, புரசைவாக்கம் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களிலும் நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. இதனால், அண்ணாசாலை போன்ற பிரதான சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. நள்ளிரவில் பயணம் செய்த பைக், லாரி போன்ற வாகனங்கள் அனைத்தும் குளம் போல தேங்கிக் கிடந்த தண்ணீரில் மிதந்தபடியே சென்றன. 

Next Story

மேலும் செய்திகள்