"அசுரன்" படத்தை பாராட்டிய ஸ்டாலின்-ஸ்டாலினை விமர்சித்த ராமதாஸ்...

'அசுரன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து, பதிவிட்டுள்ளார்
அசுரன் படத்தை பாராட்டிய ஸ்டாலின்-ஸ்டாலினை விமர்சித்த ராமதாஸ்...
x
'அசுரன்' திரைப்படத்தை பாராட்டி பதிவிட்ட தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்து, பதிவிட்டுள்ளார். அசுரன் திரைப்படம் படம் அல்ல பாடம் என்றும் பஞ்சமி நிலம் குறித்து பேசி சமூகத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது என்றும் பாராட்டி, ஸ்டாலின் தமது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இந்நிலையில் இந்த பதிவை மேற்கோள்காட்டி, ராமதாஸ்  அசுரன் படத்தை பாராட்டிய ஸ்டாலின், முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் வழங்குவார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்து, பதிவிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்