தனியார் பள்ளியின் 3 பேருந்துகள் பறிமுதல் : உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை

ஒசூரில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு சொந்தமான 3 பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தனியார் பள்ளியின் 3 பேருந்துகள் பறிமுதல் : உரிய ஆவணங்கள் இல்லாததால் நடவடிக்கை
x
ஒசூரில்  வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒன்னல்வாடி பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான 3 பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்டதால் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 பேருந்துகளையும் அதிகாரிகள் காவல் நிலையத்தில்
ஒப்படைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்