டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு, தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்

குடியாத்தம் அருகே, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக காரணமாக இருந்த தனியார் பள்ளிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு, தனியார் பள்ளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே  பள்ளிகொண்டா அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த நட்சத்திரா என்ற 4 வயது சிறுமி டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் சிறுமி நட்சத்திரா படித்த பள்ளி மற்றும் அவருடைய வீட்டின் அருகே ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிறுமி படித்த பள்ளியின் சுற்றுப்புற பகுதிகளில், தேங்காய் மட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் தேங்கிய நீரில் டெங்கு கொசு புழுக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

அதேபோல் பள்ளியின் மேற்கூரையில் தேங்கி இருந்த தண்ணீரிலும் கொசு லார்வாக்கள் இருந்துள்ளது. இதனையடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த தனியார் பள்ளிக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்