வளைவில் பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்-அசுர வேகத்தில் உருண்டு சாக்கடைக்குள் விழுந்த பரிதாபம்

வளைவில் அதிவேகமாக சென்றதால் பேருந்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட இளம்பெண் சாக்கடைக்குள் விழுந்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன
வளைவில் பேருந்தை அதிவேகமாக இயக்கிய ஓட்டுநர்-அசுர வேகத்தில் உருண்டு சாக்கடைக்குள் விழுந்த பரிதாபம்
x
வளைவில் அதிவேகமாக சென்றதால் பேருந்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட இளம்பெண் சாக்கடைக்குள் விழுந்த பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்த கோகிலா என்ற பெண் ஈரோடு செல்வதற்காக சேலத்தில் இருந்து அரசு பேருந்தில் பயணித்துள்ளார். சர்வீஸ் ரோடு வளைவில் பேருந்தை ஓட்டுனர் அதிவேகமாக திருப்பியதால் உள்ளே நின்ற கோகிலா வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார். விழுந்த வேகத்தில் தார் சாலையில்  அசுரவேகத்தில் உரசியபடி சென்ற கோகிலா அருகில் உள்ள சாக்கடைக்குள் விழுந்துள்ளார். படுகாயமடைந்த அவருக்கு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமாரவில் பதிவாகியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்