கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது-சேதமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை

மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி, மழையால் இடிந்து விழுந்தது.
கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது-சேதமடைந்த பகுதியை சீரமைக்க கோரிக்கை
x
மாமல்லபுரத்தில் உள்ள கங்கை கொண்டான் மண்டபத்தின் ஒரு பகுதி, மழையால் இடிந்து விழுந்தது. தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான கங்கை கொண்டான் மண்டபம் பேரூராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. 14-ம் நூற்றாண்டில் பராங்குச மன்னனால் கட்டப்பட்ட இந்த மண்டபத்தின் ஒரு பகுதி காலையில் பெய்த மழையால் இடிந்து விழுந்தது. மற்றொரு பகுதி விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளது. அந்த மண்டபம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ள நிலையில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. விரிசல் ஏற்பட்ட பகுதியை அகற்றி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்