கன்னியாகுமரியில் தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரம் - பெண் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்

கன்னியாகுமரியில் தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரத்தில் உடந்தையாக இருந்த பெண் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரியில் தொழிலதிபர் கடத்தப்பட்ட விவகாரம் - பெண் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்
x
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே தொழிலதிபர் ஜெர்லின் என்பவரை கடத்திய கும்பல் அவரிடம் இருந்த நகைகள் மற்றும் சொகுசு கார்களையும் பறித்துச் சென்றது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,  கூலிப்படையை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். கடத்தல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டதாக கருங்கல் காவல் நிலைய ஆய்வாளர் பொன்தேவி, துணை ஆய்வாளர் ரூபன் ஜெய திலக், தலைமை காவலர் ஜெரோம் ஜோன்ஸ் மீது புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து டிஐஜி பிரவீன்குமார் அபிநவ் உத்தரவிட்டுள்ளார். தலைமறைவான 3 பேரையும் தேடும் பணியும் நடைபெற்று வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்