ஓமந்தூரார் அரசினர் மருத்துவ கல்லூரியில் தூய்மைப் பணி-மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்
சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள்,மக்களிடையே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர்
சென்னை சேப்பாக்கம் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், மக்களிடையே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் உள்ள குப்பைகளை அகற்றினர். கொசுக்கள் உற்பத்தியாக கூடிய தண்ணீர் தேங்கும் பொருட்களை சுத்தம் செய்தும் அப்புறப்படுத்தினர். இதில் நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவை மாணவர் சங்கம், தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர். டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவே இந்த பணியை மேற்கொண்டதாக கல்லூரி துணை முதல்வர் சுகுணா பாய் தெரிவித்தார்.
Next Story