"தொண்டர்கள் உழைப்பு வீண் போகாது" - அதிமுக
அதிமுக தொண்டர்களின் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது என்று அக்கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
அதிமுக 48ஆம் ஆண்டில் நாளை அடியெடுத்து வைக்க உள்ள நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போது, அதிமுக ஆட்சியில் இருப்பதை போல...கட்சியின் பொன்விழா ஆண்டான 2022 லும், அதிமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்க, பணிகளை தொடங்குவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். கட்சிப் பணிகளில் தோளோடு தோளாக நின்று உழைத்த தொண்டர்களின் உழைப்பு ஒரு போதும் வீண் போகாது என்றும்....தொண்டர்களின் பாதுகாப்பு அரணாக அதிமுக என்றென்றும் திகழும் என்ற உறுதியை அளிப்பதாகவும், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
Next Story