திருச்சி வங்கி கொள்ளை குற்றவாளி ராதாகிருஷ்ணன் கைது : மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்

திருச்சி வங்கி கொள்ளை சம்பவத்தில் 9 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியதை தொடர்ந்து தனிப்படை போலீசார் கோயில்களில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர்.
திருச்சி வங்கி கொள்ளை குற்றவாளி ராதாகிருஷ்ணன் கைது : மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்திய போலீசார்
x
திருச்சியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் 470 சவரன் தங்க நகைகள், 19 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜூ உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தேடும் பணி நடைபெற்றது. சமீபத்தில் நடந்த நகைக் கடையில் கொள்ளையடித்த முருகன் கும்பலே வங்கி கொள்ளையிலும் ஈடுபட்டது தெரியவந்தது. வங்கி கொள்ளையில் முக்கிய குற்றவாளியான கேஸ் வெல்டர் ராதாகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். 9 மாதங்களுக்கு பிறகு கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால் தனிப்படையை சேர்ந்த போலீசார் கோயில்களில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். தனிப்படை காவலர்கள் விஜயகுமார், ஹரிஹரன், உதவி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்