புறநகர் ரயில்களில் பழைய பெட்டிகளை இயக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்

அரசு நிர்வாகத்தை நீதிமன்றமே ஏற்று நடத்தக் கோரும் வகையில் பொதுநல வழக்குகள் இருப்பதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
புறநகர் ரயில்களில் பழைய பெட்டிகளை இயக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
x
சென்னை - செங்கல்பட்டு - அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் இயக்கப்படும் பபுறநகர் ரயில்களில் பழைய பெட்டிகளை இயக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவில் புதிய பெட்டிகளில் இருக்கைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்று கூறி மனுதாரர் புகார் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பிக்க இயலாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்